சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடிகர் விஜய் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதை போலீஸார் தடுத்ததால் போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஆவின் இணைய தலைவர் அ.மில்லர், நகரச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.