உதகையில் அனுமதியின்றி இயங்கிய மகளிர் விடுதி மூடல்
By DIN | Published On : 04th April 2019 06:11 AM | Last Updated : 04th April 2019 06:11 AM | அ+அ அ- |

உதகையில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த பணிபுரியும் மகளிர் விடுதி மூடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், அரசு விதிகளின்படி பதிவு செய்யத் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் மூலம் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உதகை- குட்ஸ்ஷெட் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பணி புரியும் மகளிர் விடுதி பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களுடன் இதுவரை விண்ணப்பிக்கவில்லை.
இவ்விடுதியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில், இந்த மகளிர் விடுதி அரசின் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது. எனவே அரசு விடுதிகளின்படி இவ்விடுதி மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.