கிராமங்களில் மது, கந்து வட்டிக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம்

படுகர் இளைஞர் பேரவை சார்பில் குந்தை சீமைக்கு உள்பட்ட கிராமங்களில் மது மற்றும் கந்து வட்டிக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

படுகர் இளைஞர் பேரவை சார்பில் குந்தை சீமைக்கு உள்பட்ட கிராமங்களில் மது மற்றும் கந்து வட்டிக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட படுகர் இளைஞர் பேரவை சார்பில் படுகரின மக்கள் வசிக்கும் ஹட்டிகள் எனப்படும் கிராமங்கள்தோறும் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கந்து வட்டி வாங்குவதால் குடும்பங்கள் சீரழியும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். படுகர் இளைஞர் பேரவைத் தலைவர் மகேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், ஆலோசகர் சிவாநஞ்சன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் நிர்வாகிகள் மஞ்சூர் அருகே உள்ள கரியமலை, மஞ்சூர் ஹட்டி, முக்கிமலை, எடக்காடு, முள்ளிமலை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த கிராமங்களின் மையப் பகுதியில் மது அருந்தவும், புகைப்பிடிக்கவும், கந்து வட்டிகாரர்கள் நுழைய முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது.
கிராம தலைவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பொதுமக்கள் மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். 
மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் மது ஒழிப்பு மற்றும் கந்து வட்டிக்கு எதிராக பிரசாரம் செய்து, விழிப்புணர்வு பலகைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக படுகரின இளைஞர் பேரவையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com