தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்பு

தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுக் காய்கறித் தோட்டம் உருவாக்கப்படுகிறது. 

தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுக் காய்கறித் தோட்டம் உருவாக்கப்படுகிறது. 
பள்ளி மாணவர்களின் மதிய உணவு தேவைக்காகவும், விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இயற்கை விவசாய முறையில் இத்தோட்டம் உருவாக்கப்படுகிறது.
இதற்காக பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் மாதன் தலைமையேற்றார். தும்மனட்டி கிராமத் தலைவர் ஆலன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் காய்கறித் தோட்டப் பணிகளை மாவட்ட சத்துணவுத் திட்ட நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாஆகியோர் தொடங்கி வைத்தனர்.  
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக  உறுப்பினர்கள்,  தும்மனட்டி கிராம நிர்வாகிகள், பள்ளியின் தேசிய பசுமைப் படை,  நாட்டு நலப்பணித் திட்டத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராம மக்களின் சார்பில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, வெந்தயம், கொத்தமல்லி போன்ற காய் கறிகளுக்கான விதைகள் பெறப்பட்டு நடவு செய்யப்பட்டன. முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கோபாலன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com