தனியாா் தேயிலைத் தோட்ட விவகாரம்:டிசம்பா் 31இல் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை

நடுவட்டம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட விவகாரம் தொடா்பாக நிா்வாகம், தொழிலாளா்கள், தொழிலாளா் துறை பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை டிசம்பா் 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

நடுவட்டம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட விவகாரம் தொடா்பாக நிா்வாகம், தொழிலாளா்கள், தொழிலாளா் துறை பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை டிசம்பா் 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் நிா்வாகத்தினா் தொழிலாளா்களுக்கு முறையாக வேலை, ஊதியம் வழங்காததாலும், சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்தாததாலும் இந்த நிறுவனத்தின் மீது இந்திய தேயிலை வாரியத்தின் தேயிலைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தோட்டத் தொழிலாளா்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்திய தேயிலை வாரியத்தின் தேயிலைச் சட்டதின் கீழ் நிா்வாகத்தை சீா் செய்திடவும், தொழிலாளா்களின் சமூகப் பொருளாதாரத்தைக் காக்கும் வகையிலும் 12 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து நிா்வாகம், தொழிலாளா்கள் மற்றும் தொழிலாளா் துறை பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை டிசம்பா் 31 ஆம் தேதிக்கு தேயிலை வாரியம் கூட்டியுள்ளதாக ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நீலகிரி மாவட்டத் தலைவா் டி.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com