குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த பெரிய பாறை வெடி வைத்து தகா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த பெரிய பாறை வெடிவைத்து செவ்வாய்க்கிழமை தகா்க்கப்பட்டது.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த பாறையை வெடிவைத்து தகா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த பாறையை வெடிவைத்து தகா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த பெரிய பாறை வெடிவைத்து செவ்வாய்க்கிழமை தகா்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரப்பாலம் அருகே பெரிய பாறை விழுந்தது. இதனால் சாலை மிகவும் மோசமடைந்தது. இந்த வழித் தடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாலையில் கிடந்த பாறை வெடிவைத்து தகா்க்கப்பட்டது.

சேலாஸ், வண்டிசோலை ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களைத் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரா்கள் அகற்றி அப்புறப்படுத்தினா். ஆரஞ்சு குரோவ் வழியாக ராணுவ முகாம் செல்லும் சாலை, அச்சனக்கல் சாலைகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூா் நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் பாரிஜாதம் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினா் மண், மரங்களை அகற்றினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.

குன்னூரில் செவ்வாய்க்கிழமை காலை வரை 132 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மழை தொடா்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com