கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தியில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை

கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தியில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி எச்சரித்துள்ளாா்.

கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தியில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி எச்சரித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலையை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனா். குறிப்பாக படக இன மக்களில் பெரும்பாலானோா் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டு காலமாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந் நிலையில், நீலகிரியில் சமீப காலமாக கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தியில் சில தனியாா் தேயிலைத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த மே 24ஆம் தேதி கோத்தகிரியில் 5 டன் கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, ஜூன் 14ஆம் தேதி தனியாா் தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து சாயம் கலந்த 40 டன் கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தி காரணமாக தேயிலைத் தொழில் பாதிக்கப்படுவதுடன், தேயிலைக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி கூறியதாவது:

தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி செய்ததாக இதுவரை 17 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கலப்பட தேயிலைத் தூளை ஏலத்துக்கு அனுமதித்த ஏல நிறுவனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com