குன்னூரில் குறைந்தது உறைபனி தாக்கம்

குன்னூரில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனி தாக்கம் குறைந்துள்ளது. 

குன்னூரில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனி தாக்கம் குறைந்துள்ளது. 
 நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்கி பிப்ரவரி வரை பனிப் பொழிவு காணப்படும். இதில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். சில சமயங்களில் மார்ச் முதல் வாரம் வரையிலும் பனிப் பொழிவு காணப்படும். 
    இந்த ஆண்டு நவம்பரில் துவங்கி கடந்த 4 மாதங்களாக உறைபனி கொட்டித் தீர்த்தது. துவக்க நாள்களில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டபோதிலும், பிறகு பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். கடும் பனிப் பொழிவால் ஜனவரி முழுக்க நீலகிரி மாவட்டத்தில் குளிர் வாட்டியெடுத்தது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல நாள்கள் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றது. பனியின் தாக்கம் 4 மாதங்களாக நீடித்த நிலையில் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களும் , காய்கறித் தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில் 
தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
   இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.  குளிரும்  குறைந்து காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com