டாஸ்மாக் மாற்றுத் திறனாளி ஊழியர்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 29th January 2019 01:12 AM | Last Updated : 29th January 2019 01:12 AM | அ+அ அ- |

கோத்தகிரியில் டாஸ்மாக் மாற்றுத் திறனாளி ஊழியர்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு வட்டாரத் தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் பரமலிங்கம், துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், டாஸ்மாக்கில் தொகுப்பூதிய அடிப்படையில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 600 மாற்றுத் திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கிப் பணி நிரந்தரம் செய்வதாக வெளியிட்ட ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், பிப்வரி 19ஆம் தேதி குடும்பத்துடன், தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவது, உண்ணாவிரதம் இருப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொது செயலாளர் அருண்குமார், கரூர் கந்தசாமி, கோவையைச் சேர்ந்த அழகேசன், கோவிந்தராஜ், வேலவன், பாண்டியராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.