கெத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மீண்டும் திறக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கெத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்

நீலகிரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கெத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக அரசு ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில தலைவருமான டாக்டர் கிங் நார்சியஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
 நீலகிரி மாவட்டம் கெத்தை பகுதியில் கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் குந்தா பகுதியில் ஆங்கில வழிக் கல்விக்கான பள்ளி தொடங்கப்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
 அதைத் தொடர்ந்து இப்பள்ளி கீழ்குந்தா பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 3ஆம் தேதி பள்ளியில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் இங்கு பயின்ற மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மாற்றுச் சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
 இதனால் இங்கு படித்து வந்த மாணவ, மாணவியர் 17 கி.மீ. தொலைவிலுள்ள ஓனிகண்டி பகுதிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ நடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளி முடிந்ததும்  மாலையில் அங்கு வரும் அரசுப் பேருந்தை பிடித்து, இரவு நேரங்களில் வீட்டுக்கு வருகின்றனர். இதற்கு வசதியில்லாத பல மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை நிறுத்தி விட்டனர்.
 நீலகிரி மாவட்டத்தில் கரியமலை பகுதியில் 3 மாணவர்களுக்காகவும், தாய்சோலையில் 2  மாணவர்களுக்காகவும், கிண்ணக்கொரையில் 3 மாணவர்களுக்காகவும் அரசுப் பள்ளிகள் இன்னமும் செயல்பட்டு வரும் நிலையில் அதைவிட கூடுதலாக எண்ணிக்கை கொண்ட கெத்தை பள்ளி மட்டும் மூடப்பட்டுள்ளது உள்நோக்கமுடையதாகும். 
 எனவே, தற்போது படிப்பை தொடர முடியாமல் உள்ள கெத்தை பகுதியை சேர்ந்த 5 ஏழை மாணவ, மாணவியருக்காக கடந்த 59 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பள்ளியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com