கூடலூர் சிவன்மலையில் மஹா சிவராத்திரி விழா
By DIN | Published On : 02nd March 2019 09:48 AM | Last Updated : 02nd March 2019 09:48 AM | அ+அ அ- |

கூடலூர் சிவன்மலையில் மஹா சிவராத்திரி மற்றும் லட்சார்ச்சனை விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கூடலூர் அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் திங்கள்கிழமை காலை 7மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. 9.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, பகல் 12 மணிக்கும் மதிய பூஜை, மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு அய்யப்பா சேவாசங்கம் சார்பில் மணிகண்டன் குழுவினரின் பஜனை பாடல்கள் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கவிஞர் வேலு ராஜேந்திரன் தலைமையில் இறைவழிபாட்டின்போது இறைவனிடம் வேண்டிக் கேட்பது அருளா, பொருளா என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு ஐயர் குழுவின் பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு கூட்டு வழிபாடு மற்றும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை துவக்குகிறது. காலை 5 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் ஆர்.நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்துவருகின்றனர்.