நீலகிரியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. போட்டி

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மக்களவை முன்னாள் உறுப்பினர் சேவூர் எம்.தியாகராஜன் (59) அறிவிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மக்களவை முன்னாள் உறுப்பினர் சேவூர் எம்.தியாகராஜன் (59) அறிவிக்கப்பட்டுள்ளார்.
 அவிநாசி வட்டம், சேவூர் அருகே உள்ள முதலிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த இவர், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை மாரன், தாயார் பட்டாள்.
 மனைவி உமாமகேஷ்வரி. இவர்களுக்கு யுவராஜ், மதன்ராஜ், ஜெயராஜ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். தியாகராஜன், 1978 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். 1990 இல் கிளை செயலாளர்,  1993- 1998 அவிநாசி ஒன்றிய ஜெயலலிதா பேரவை  ஒன்றிய துணைச் செயலாளர், 1998-2008 வரை ஒருங்கிணைந்த புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.
 2011 முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட பொருளாளராக உள்ளார்.
 அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 1998 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com