வாகனச் சோதனை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் ரூ.12 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச்

மக்களவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.1.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை உள்ளிட்ட 37 குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் திங்கள்கிழமை இரவு வரை உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 9 பேரிடமிருந்து ரூ. 84 லட்சத்து 79,420,  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 32 பேரிடமிருந்து  ரூ.53 லட்சத்து 82,900,  குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 35,000 என மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 97,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. 
 இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.67,180,  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 5 பேரிடமிருந்து ரூ.10 லட்சத்து 38,450 , குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 5 ஆயிரத்து 630 பறிமுதல் செய்யப்பட்டது. 
இத்தொகையையும் சேர்த்து உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.85 லட்சத்து 46,600, கூடலூர் சட்டப் பேரவைத்  தொகுதியில் ரூ. 64 லட்சத்து 21,350, குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.4.35 லட்சம் என  மொத்தம் ரூ. 1 கோடியே 54  லட்சத்து 2,950 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகைகளில் செவ்வாய்க்கிழமை இரவு வரை உதகை தொகுதியில் ரூ. 6 லட்சத்து 51,610,  கூடலூர் தொகுதியில் ரூ. 8 லட்சத்து 89,000, குன்னூர் தொகுதியில் ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்து 80,510 விடுவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com