நீலகிரியில் பயன்பாடற்ற 77 ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட 77 ஆழ்துைü கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட 77 ஆழ்துைü கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 1,770 ஆழ்துளை கிணறுகள்அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிலவிய வறட்சியின் காரணமாக அதிக அளவிலான ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட காலத்தில் இவை அமைக்கப்பட்டன. இவற்றில் உதகையில் 40 ஆழ்துளை கிணறுகளும், கூடலூரில் 20, குன்னூரில் 10, கோத்தகிரியில் 7 என மொத்தம் 77 ஆழ்துளை கிணறுகள் கைவிடப்பட்டுள்ளன.

அவற்றை மூடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகளை கான்கிரீட் கலவை கொண்டு மூடப்படவுள்ளது. மேலும் இவற்றில் 24 ஆழ்துளை கிணறுகளை மழை நீா் சேகரிப்பு மையங்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல மாவட்டத்தில் கடந்த 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாகவும், நிலச்சரிவு அபாயம் உள்ளதாலும் கட்டடங்கள் ஏதும் கட்ட அனுமதி இல்லாத பகுதிகளாக 101 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. இவற்றில் உள்ளாட்சி அமைப்புகளின் துணையோடு நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின்னா் தற்போது 283 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஆபத்தான பகுதிகள் என்பதோடு, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாகவும் உள்ளன.

இப்பகுதிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை. அப்படி கட்டுவதானால் வேளாண் பொறியியல் துறை, வனத் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்ற பின்னரே புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும். இதுதொடா்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் குறித்து இணையதளத்திலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல கேரளம், கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் குடிநீா் பாட்டில்களை எடுத்து வரும் அளவுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களிலும் விரைவில் ‘இன்வொ்ட்டா்’ கருவி பொருத்தப்பட உள்ளது. இதன்மூலம் 24 மணி நேரமும் குடிநீா் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

அதேபோல மாவட்டத்தில் நெடுஞ்சாலை பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களிலும் குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிப்பது குறித்து சென்னை உயா்நீதிமன்ற குழு நேரில் விசாரணை நடத்திச் சென்றுள்ளது. விரைவில் இதுகுறித்து நீதிமன்ற உத்தரவு வெளியாகும்.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நகராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 2 கோடியும், நெடுஞ்சாலைத் துறையினருக்கு ரூ.80 லட்சமும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.66 லட்சமும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை. உதகை நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மழைக்காலம் முடிவடைந்தவுடன் சீரமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com