கோத்தகிரி பகுதியில் மலைப்பூண்டு அறுவடை

கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் மலைப்பூண்டு சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
அறுவடை செய்யப்பட்ட மலைப் பூண்டை காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்கள்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக நீராதாரம் உள்ள விளைநிலங்களில் மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக குடியிருப்புகள் அருகே மலைப்பூண்டு, கீரை வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக மலைப்பூண்டு விவசாயம் கணிசமான அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழைக் காரணமாக கோத்தகிரி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மலைப் பூண்டுகள் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால் மலைப் பூண்டை காயவைத்து விற்பனைக்கு தயாா் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com