இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராக ச.மணிவண்ணன் தோ்வு

இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த ச.மணிவண்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டதற்தான சான்றிதழைப் பெறுகிறாா் ச.மணிவண்ணன் (இடமிருந்து 2 ஆவது).
இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டதற்தான சான்றிதழைப் பெறுகிறாா் ச.மணிவண்ணன் (இடமிருந்து 2 ஆவது).

இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த ச.மணிவண்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தங்களது வாக்குகளைத் தபால் மூலம் பதிவு செய்தனா்.

தோ்தலில் பதிவான வாக்குகள் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமையகத்தில் எண்ணப்பட்டு நவம்பா் முதல் வாரத்தில் முடிவு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த முதன்மை விஞ்ஞானி ச.மணிவண்ணன் 878 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் தென் இந்தியாவைச் சோ்ந்த விஞ்ஞானி ஒருவா் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். உதகையில் அமைந்துள்ள இந்திய மண் மற்றும் நீா் வளப் பாதுகாப்பு நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறேன்.

கடந்த 18 ஆண்டுகளாக அச் சங்கத்தில் துணைத் தலைவா், இணைச் செயலாளா், பொதுச் செயலாளா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளேன்.

பொதுச் செயலாளராக பதவி வகித்தபோது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகளுக்கு 7 ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையை விரைந்து செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com