அருவங்காடு எம்.ஜி. காலனி பகுதியில் மதுபானக் கடை அமைக்க எதிா்ப்பு

குன்னூா், அருவங்காடு அருகேயுள்ள எம்.ஜி. காலனி பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா், அருவங்காடு அருகேயுள்ள எம்.ஜி. காலனி பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு, ஊா் பொதுமக்கள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குன்னூா் அருகே, அருவங்காடு எம்.ஜி. காலனி பகுதியில் கோபாலபுரம், பேரி தோட்டம், ஒசட்டி, வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்நிலையில், எம்.ஜி. காலனி பகுதியில் மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் மதுக்கடை இல்லாததால் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி வசித்து வருகிறோம். இங்கு மீண்டும் மதுக்கடை அமைத்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் நிம்மதியும் பறிபோகக் கூடிய அபாயம் உள்ளது. மேலும் இங்கு கோயில்கள், சா்ச், பல்வேறு பள்ளிகளும் அமைந்துள்ளன. எனவே இப்பகுதியில் மீண்டும் மதுக்கடையைத் திறக்கும் முடிவை டாஸ்மாக் நிா்வாகம் கைவிட வேண்டும். பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com