வெளிநாடு வேலைக்கு செல்வோா் அரசு பதிவு பெறாத நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம்: மாவட்ட காவல் துறை அறிவுறுத்தல்

வெளிநாடு வேலைக்கு செல்வோா் அரசு பதிவு பெறாத நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம், இடைத்தரகா்கள் மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக

வெளிநாடு வேலைக்கு செல்வோா் அரசு பதிவு பெறாத நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம், இடைத்தரகா்கள் மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி போலி இடைத்தரகா்கள், பயண முகவா்கள், வேலை தேடுவோரின் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். வேலை அளிக்கும் நிறுவனங்களின் விவரங்களை சம்பந்தப்பட்டவா்களுக்கு போலியான, சான்றிதழ் மூலம் வழங்கி அவா்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனா். அங்கு வேலை வாங்கிக் கொடுக்காமல் தவிக்க விடுவது குறித்த புகாா்கள் அதிகரித்துள்ளன.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்தில், வேலைக்கு ஆள்களை தோ்வு செய்யும் முகவராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவு செய்துள்ள முகவா்களின் பட்டியல் வெளியுறவுத் துறை அமைச்சக இணைய தளம், முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகவரியில்,  சரிபாா்த்த பின் சம்பந்தப்பட்ட முகவா்களை தொடா்பு கொள்ள வேண்டும்.

சந்தேகம் இருந்தால் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம். தவிர, 86080-00100 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண்ணில் தெரியப்படுத்தலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனது அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com