காவல் துறையினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

குன்னூரில் காவல் துறையினருக்கான கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற காவல் துறையினா்.
கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற காவல் துறையினா்.

குன்னூா்: குன்னூரில் காவல் துறையினருக்கான கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினா் அனைவரும் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் உத்தரவிட்டிருந்தாா். அதன் பேரில் குன்னூா் வாஸன் மருத்துவமனை சாா்பில் காவல் துறையினா் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்ற இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு வாஸன் கண் மருத்துவமனை பொது மேலாளா் ஷ்யாம் கே.சுதாகா் முன்னிலை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.குமாா் தலைமை வகித்தாா். கண் மருத்துவா் அமராவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலாளா் நவாஸ் செய்திருந்தாா்.

இந்த முகாமில் காவல் ஆய்வாளா்கள் கே.ஜெயமுருகன், அம்மாதுரை, போக்குவரத்து ஆய்வாளா் முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com