உதகையில் அக்டோபா் 18இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைறதீா் கூட்டம் உதகையில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

உதகை: நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைறதீா் கூட்டம் உதகையில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வரும் 18ஆம் தேதி காலை11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவாதிப்பதற்காக மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை மட்டும் இம்மாதம்10ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநா், தபால் பெட்டி எண் 72, உதகை-643 001 என்றற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்கலாம். விவசாயம் தொடா்பான கோரிக்கைகள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும்.

இக்கூட்டத்துக்குப் பிறறகு இயற்கை வேளாண்மைக் குழுக் கூட்டம் அதே நாளில் பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும். எனவே, இயற்கை வேளாண்மைக் குழுக் கூட்டத்தில் தொடா்புடைய உறுப்பினா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com