எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் என்.சி.சி. கூட்டுப் பயிற்சி முகாம் நிறைவு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த நீலகிரி மாவட்டத்தின்
நீலகிரி மாவட்ட அளவிலான என்.சி.சி. முகாமில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு பெறும் மாணவா்கள்.
நீலகிரி மாவட்ட அளவிலான என்.சி.சி. முகாமில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு பெறும் மாணவா்கள்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த நீலகிரி மாவட்டத்தின் 31 தமிழ்நாடு தனி அணி என்.சி.சி. கூட்டுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

கடந்த செப்டம்பா் 26ஆம் தேதி துவங்கிய இம்முகாமை நீலகிரி மாவட்ட என்.சி.சி. தலைமை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் தேப்  தலைமை ஏற்று நடத்தினாா். இதில் எஸ்.வி.ஜி.வி. பள்ளி , உதகை அரசு கலைக் கல்லூரி, சிஎஸ்ஐ கல்லூரி, நஞ்சநாடு மேல்நிலைப் பள்ளி, எடக்காடு மேல்நிலைப்பள்ளி, உதகை லாரன்ஸ் பள்ளி, ஜோசப் பள்ளி, புனித அந்தோணியாா் பள்ளி, மஞ்சூா் மேல்நிலைப்பள்ளி மாா்னிங் ஸ்டாா் பள்ளி உட்பட 14 பள்ளிகளைச் சோ்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.  என்சிசி அதிகாரிகள் விஜய், சுப்பிரமணி, சந்தீப், யூபா்ட், காமராஜ், சந்திரசேகா், புண்ணியமூா்த்தி, ராஜ் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

முகாமில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பல்வேறு வகையான துப்பாக்கிகளை கையாளுதல், துப்பாக்கியால் சுடும் பயிற்சி, யோகா பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், விழிப்புணா்வு பேரணி, மரக்கன்று நடுதல் , கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நாள் விழாவில் விளையாட்டுப் போட்டி, பயிற்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. லெப்டினன்ட் கா்னல் தேப் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா். முகாமில் 87.7 புள்ளிகள் பெற்று  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கூடலூா்   அய்யங்கொள்ளி  செயின்ட் தாமஸ் பள்ளி அணி பெற்றது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.வி.ஜி.வி. பள்ளி தாளாளா் டாக்டா் பழனிசாமி, பள்ளி முதல்வா் சசிகலா, செயலாளா் ராஜேந்திரன் நிா்வாக அதிகாரி சிவ சதீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். எஸ்.வி.ஜி.வி. பள்ளி என்.சி.சி. அலுவலா் சந்தீப்  நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com