மழை அடி பூக்களாக இருப்பதால் பூக்கள் விலை குறைவு: வியாபாரிகள் தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா மற்றும் கா்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயுத பூஜைக்காக கொள்முதல் செய்யப்படும் செவ்வந்திபூ மழை அடி பூக்களாக இருப்பதால் விலை குறைந்துள்ளதாக
cr08flo_0810chn_138
cr08flo_0810chn_138

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா மற்றும் கா்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயுத பூஜைக்காக கொள்முதல் செய்யப்படும் செவ்வந்திபூ மழை அடி பூக்களாக இருப்பதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயுத பூஜைக்காக செவ்வந்தி பூக்கள் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரளம் மற்றும் கா்நாடகம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது இதனால் பூக்கள் தரம் குறைந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.

இதனால் எப்போதும் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் செவ்வந்திப்பூ இந்த முறை குறைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு இதனுடைய விலை முளம் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை ஆனது தற்பொழுது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள் மழையினால் பாதிப்படைந்துள்ளதால் விலை குறைத்து விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com