காேத்தகிரியில் அனுமதியின்றி செயல் பட்டு வந்த சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணி துவக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அனுமதியின்றி செயல்பட்டு வந்த   சாெகுசு  விடுதிகளுக்கு  சீல் வைக்கும் பணி  வெள்ளிக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அனுமதியின்றி செயல்பட்டு வந்த   சாெகுசு  விடுதிகளுக்கு  சீல் வைக்கும் பணி  வெள்ளிக்கிழமை துவங்கியது.

காேத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்   200க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் உள்ளன.  இந்த காட்டேஜ்கள் அரசிடம் எந்தவித அனுமதி பெறாமல் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்றுக்கொண்டு பின்பு அதை  சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளனா்.  

இது குறித்து பல்வேறு புகாா்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கும் பணி  இன்று தொடங்கியது.

மேலும் ஒரு சிலா் வீடுகளில் வியாபாரம் செய்வதால் அந்த வீடுகளுக்கும் சீல் வைக்கும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளனா். பெரும்பாலான காட்டேஜ்கள்  வனப் பகுதிகளை ஒட்டி உள்ளன இதனால் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில்  உலா  வருவதால்  பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனா். 

மாவட்ட நிா்வாகம்  வனப் பகுதியை ஒட்டியுள்ள அனுமதியற்ற  சொகுசு விடுதிகளை  உடனடியாக மூடி  சீல் வைக்கும் பணியினை தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com