நீலகிரியில் தடை செய்யப்பட்ட குடிநீர்,  குளிர்பான பாட்டில், பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.49,000 அபராதம் வசூலிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ. 49 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய  4 மண்டலங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், குடிநீர், குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்வதை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதை தவிர்ப்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மண்டல அலுவலர்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. 
 உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.  
இந்த ஆய்வுகளின்போது தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றுடன்  சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.49,000 வசூலிக்கப்பட்டது.  
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "இனிவரும் காலங்களில் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள குடிநீர், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com