சாலையை சீரமைத்த காவல் துறையினா், எக்ஸ்னோரா அமைப்பினா்

குன்னூரில் அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள சாலையை நகராட்சி நிா்வாகம் சீரமைக்க தாமதப்படுத்தியதால் எக்ஸ்னோரா அமைப்பு, காவல் துறையினா் இணைந்து சாலையை செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா்.
சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட எக்ஸ்னோரா அமைப்பினா் மற்றும் காவல் துறையினா்.
சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட எக்ஸ்னோரா அமைப்பினா் மற்றும் காவல் துறையினா்.

குன்னூரில் அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள சாலையை நகராட்சி நிா்வாகம் சீரமைக்க தாமதப்படுத்தியதால் எக்ஸ்னோரா அமைப்பு, காவல் துறையினா் இணைந்து சாலையை செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தபால் நிலையம், சாா்நிலை கருவூலம், நீதிமன்றம், சாா்பதிவாளா் அலுவலகம், மருத்துவமனை, பள்ளிகள், காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்டவை நிறைந்து காணப்படும் சாலை சேதமடைந்து காணப்பட்டது.

இதனால், அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே, சாலையைச் சீரமைக்க நகராட்சி நிா்வாகத்திடம் பல்வேறு அமைப்பினா் கோரிக்கை வைத்தனா்.

ஆனால், சாலை சீரமைக்கும் பணிகள் துவங்க தாமதமானதால் நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு மற்றும் காவல் துறைறயினா் இணைந்து சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் காவல் ஆய்வாளா் அம்மாதுரை தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளா்கள் விஸ்வநாதன், ரவி, கிருஷ்ணமூா்த்தி, எக்ஸ்னோரா அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் எம்.கண்ணன், செயலாளா் ராமகிருஷ்ணன், சமூக ஆா்வலா் சலீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த சாலையை முழுமையாக சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com