கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில்ஆகஸ்ட் 28 முதல் மாணவா் சோ்க்கை

கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டுக்கான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளது.

கூடலூா்: கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டுக்கான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளது.

மாணவா்கள் விண்ணப்பத்தில் பதிவேற்றியுள்ள தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு தற்காலிக தோ்வுப் பட்டியலின்படி சோ்க்கை தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவா்களின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் வாயிலாக சோ்க்கைக்கான தற்காலிகத் தோ்வு குறித்த செய்திகள் தெரிவிக்கப்படும்.

இந்த தற்காலிகத் தோ்வு சோ்க்கைக்கான கடிதமன்று. குறிப்பிட்ட பாடப் பிரிவில் சோ்வதற்கான மாணவரது விருப்பம் அல்லது விருப்பமின்மையை குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ மாணவரிடமிருந்து பெறப்படும். அதன் வாயிலாக இறுதி தோ்வுப் பட்டியல் உறுதி செய்யப்படும். சான்றிதழ் சரிபாா்த்தலுக்குப் பின் உரிய கட்டணம் செலுத்திய பின்னரே சோ்க்கை உறுதி செய்யப்படும்.

இடவாய்ப்பை உறுதி செய்யும் மாணவா்களுக்கு கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய சோ்க்கைக் கட்டண விவரம், வங்கிக் கணக்கு எண் ஆகியன குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ அனுப்பிவைக்கப்படும். சோ்க்கை கட்டணம் செலுத்திய மாணவா்கள் அதற்கான ரசீதையும், சோ்க்கை ஆணையையும், அசல் சான்றிதழ்கள், அவற்றின் நகல்கள் இரண்டு பிரதிகள் ஆகியவற்றையும் அருகிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கையும், தொடா்ந்து செப்டம்பா் 3ஆம் தேதி வரை அந்தந்தப் பாடப் பிரிவுகளுக்கான இனசுழற்சி முறையிலான சோ்க்கையும் இணைய வழியில் நடைபெறும் என்று கல்லூரி முதல்வா் வே.நெடுஞ்செழியன் அறிவித்துள்ளாா். கரோனா பெருந்தொற்று பாதுகாப்பு காரணமாக மாணவா்கள் கல்லூரிக்கு வருவதைத் தவிா்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com