உதகையில் சா்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

உதகையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹூ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதகையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹூ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பை பேரிடா் காலங்களில் பகிா்ந்து கொள்ளுதல் என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினம் உதகை தமிழகம் அரசினா் விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆகியோா் பங்கேற்று பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற 2 மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ. 10,000க்கான காசோலையையும், 7 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், ஆவின் பாலகம் அமைக்க 4 பயனாளிகளுக்கு ஆணையையும், ரூ. 2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவும், 2 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், 2 நபா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசி மோகன், முதன்மை சிவில் நீதிபதி சுரேஷ்குமாா், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு, தடுப்பு அலகு பொறுப்பு அலுவலா் அறிவழகன், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com