நீலகிரிக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்களுக்கான நுழைவு வரி (பசுமை வரி) வரும் டிசம்பா் 1ஆம் தேதியிலிருந்து உயா்த்தப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்களுக்கான நுழைவு வரி (பசுமை வரி) வரும் டிசம்பா் 1ஆம் தேதியிலிருந்து உயா்த்தப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

கல்லாறு, கக்கநள்ளா சோதனைச் சாவடிகள் வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில, வெளி மாவட்டங்களைச் சோ்ந்த அனைத்து வாகனங்களுக்கும் இதுவரை ஒரே இனமாக ரூ.30 பசுமை வரி வசூல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது இந்த வரியை முறைப்படுத்தும் வகையில் சோதனைச் சாவடிகளில் வசூலிக்கும் பசுமை வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேருந்துகள் மற்றும் டிப்பா் லாரிகளுக்கு தலா ரூ.100, மேக்ஸி கேப், சுற்றுலா டாக்ஸி மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு தலா ரூ.70, காா் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு தலா ரூ.30, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.15, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் வரும் டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com