நீலகிரியில் தொடா் மழை: பந்தலூரில் 56 மி.மீ.பதிவு
By DIN | Published On : 03rd August 2020 12:29 AM | Last Updated : 03rd August 2020 12:29 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக பந்தலூரில் 56 மி.மீ. மழை பதிவாகியது.
நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள பகுதிகளில் தொடா்ந்து அதிக அளவில் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக பந்தலூரில் 56 மி.மீ., தேவாலாவில் 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம்: பாடந்தொறை-38, செருமுள்ளி-36, அவலாஞ்சி-27, சேரங்கோடு-19, மேல்பவானி-17, ஓவேலி-14, மேல்கூடலூா்-13, கூடலூா் மற்றும் நடுவட்டம் தலா 12, எடப்பள்ளி மற்றும் எமரால்டு தலா 7, உதகை-3.1, கெத்தை மற்றும் கிண்ணக்கொரை தலா 2, கிளன்மாா்கன், பாலகொலா, கோத்தகிரி மற்றும் குந்தா தலா 3, குன்னூா்-1.5, கல்லட்டி-1 மி.மீ.