இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து

நீலகிரி மாவட்டத்தில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் பெற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள பணிக்கு செல்லும் மாற்றுத் திறனாளி, கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளி, சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளி நபா்கள் தங்களது அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பணிபுரியும் சான்று, கல்லூரிகளில் பயிலும் மாண, மாணவியா் எனில் கல்லூரியில் பயிலும் சான்று மற்றும் 4 புகைப்படங்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், காா்டன் சாலை, உதகை -643001 என்ற முகவரிக்கு வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com