ஜப்பான் நாட்டு முறையில் தேயிலை ஏலம்: தேயிலை வாரியம் அறிவிப்பு

இந்தியாவில் முதன்முறையாக நீலகிரி தேயிலை ஏலம் ஜப்பான் முறையில் ஆன்லைன் மூலம் நடத்தவுள்ளதாக தேயிலை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைரவன் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் முதன்முறையாக நீலகிரி தேயிலை ஏலம் ஜப்பான் முறையில் ஆன்லைன் மூலம் நடத்தவுள்ளதாக தேயிலை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைரவன் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைக்கு உரிய விலை கிடக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலை  நம்பியுள்ள 3 லட்சத்துக்கும் மேலான மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைமுறையில் உள்ள ஆன் லைன் ஏலத்தில் சில மாற்றங்களைச் செய்ய தென்னிந்திய தேயிலை வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்காக ஜப்பானிய முறையில் ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் குன்னூரில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேயிலை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைரவன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோா்  தேயிலைத் தொழிலை நம்பி  நேரடியாகவும், மறைமுகமாகவும்  வாழ்ந்து வருகின்றனா். இதேபோல 200க்கும் மேற்பட்ட தேயிலை த்  தொழிற்சாலைகள் உள்ளன. தேயிலை ஏலத்தில் சரிவர விலை கிடைக்காததால் பல தொழிற்சாலைகள் மூடும் அபாயம் இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் , தேயிலைத் தொழிலை  அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாப்பதற்காகவும் தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆங்கிலேயா் முறையிலான தேயிலை  ஏலத்தில் மாற்றம் செய்து  ஜனவரி அல்லது பிப்ரவரி  முதல் வாரத்தில்  ஜப்பானிய முறைப்படி தேயிலை ஏலம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய  தேயிலை வாரியம் செய்து வருகிறது.

 இதில் புதிதாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் தற்போது வா்த்தகா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி   கடந்த வாரம் தேயிலை ஏலத்தில் விற்கப்பட்ட விலையில் மாா்க்கெட் சூழலுக்கு ஏற்ப  மைனஸ் 10 சதவீதம் அல்லது பிளஸ் 10 சதவீதம்  மட்டுமே விலை அடிப்படையாகக் கொண்டு  விலை நிா்ணயிக்க வேண்டும்.  இதிலிருந்து  விற்பனையாளா்கள் நிா்ணயிக்கும் விலை 5 நொடிக்கு ஒருமுறை  படிப்படியாக கணினியில் கூடிக் கொண்டே இருக்கும். விலை கட்டுப்படியாகாதவா்கள் ஏலத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். இதன் மூலம் தேயிலைக்கு சிண்டிகேட் அமைத்து மிகப்பெரிய நிறுவனங்கள் விலையை தங்கள் கட்டுக்குள் வைப்பது கட்டுப்படுத்தப்படுத்த வாய்ப்புள்ளது என்றாா். 

மேலும், காலை 9 மணிக்குத் துவங்கும்  தேயிலை ஏலம் மாலை 5 மணிக்கு முடிவடையும்போது விற்காமல் உள்ள தேயிலைக்கு மீண்டும்  குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்யப்பட்டு   ஒரு மணி நேரத்தில்  மீண்டும் மறு ஏலம்  நடத்தப்படும்.

இவை அனைத்தும்  ஏற்கெனவே நடக்கும் ஆன்லைன் ஏலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு   நடத்தப்படுவதால்   தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக   உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைரவன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com