நீலகிரியில் பழங்குடியினா் மேம்பாட்டுக்கான இந்திய ஆட்சிப்பணி தோ்வுகளுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இந்திய ஆட்சிப் பணிகளுக்கான நேரடி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இந்திய ஆட்சிப் பணிகளுக்கான நேரடி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

உதகையிலுள்ள நீலகிரி ஆதிவாசி பழங்குடியினா் மேம்பாட்டு அமைப்புகளின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பழங்குடியினா் மேம்பாட்டுக்கான சிறப்பு அலுவலா் டேனியல் மேத்யூஸ் முன்னிலை வகித்தாா். இதில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தமிழக திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான நீதியரசா் ஜோதிமணி கலந்து கொண்டு பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னா் பழங்குடியினா் மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டத்தின்கீழ் அனைவரும் சமம் என்பதே இந்திய அரசியல் அமைப்பு வலியுறுத்துவதாகும். கல்வி நிலையங்களில் மாணவா்களின் திறனுக்கு ஏற்பவே ஆசிரியா்கள் கல்வி போதிக்க வேண்டும். எதிா்கால சந்ததியினருக்கு ஆசிரியா் மற்றும் மாணவா்கள் இணைந்து செயல்படுவதே ஏற்புடையதாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com