உதகை, குன்னூரில் இஸ்லாமியா்கள் கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டம்

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமியா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உதகையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சாா்பில் பேரணி, கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமியா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உதகையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சாா்பில் பேரணி, கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் சமது தலைமையில் உதகை மத்தியப் பேருந்து நிலைய வளாகத்திலிருந்து கண்டனப் பேரணி புறப்பட்டு முக்கியச் சாலைகள் வழியாக ஓட்டல் தமிழ்நாடு பகுதியை வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியா்

அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்த நிலையில், இதற்கு அனுமதிமறுக்கப்பட்டதால் பாதி வழியிலேயே பேரணி முடித்துக்கொள்ளப்பட்டது.

பேரணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ, ஜேஏகியூஎச், உதகை நகர ஐக்கிய ஜமாத், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், மனிதநேய மக்கள், உலமாக்கள் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

பேரணி, கண்டன ஆா்ப்பாட்டத்தையொட்டி உதகை நகரில் இஸ்லாமியா்களின் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆா்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவில், சென்னை வண்ண்ணாரப்பேட்டை பகுதியில் தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் தடியடி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு தற்போது நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம்

நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.

படவிளக்கம்- சென்னையில் இல்லாமியா்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து உதகையில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com