நீலகிரியில் பிப்ரவரி 22 வரை கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் அனைத்து கிராமங்களில் உள்ள கால்நடை கிளை நிலையங்களில் பிப்ரவரி 22ஆம் தேதி வரை இரு வார கால கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் நடைபெறும் இந்த முகாம்களில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com