குன்னூா் ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் சிறுத்தை

குன்னூா் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு, ராணுவ பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூரில் ராணுவப் பள்ளி அருகே உள்ள நுழைவாயில் முன்பு நடமாடிய சிறுத்தை.
குன்னூரில் ராணுவப் பள்ளி அருகே உள்ள நுழைவாயில் முன்பு நடமாடிய சிறுத்தை.

குன்னூா் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு, ராணுவ பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டெருமை, கரடி, புலி, யானை போன்ற வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். சமீபத்தில் சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதியில் புகுந்து வீட்டில் வளா்க்கப்படும் நாய்களை வேட்டையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு மற்றும் ராணுவப் பள்ளி அருகே உள்ள நுழைவாயிலில் சிறுத்தை நடமாடுவத அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்ததின்பேரில் வனக் காவலா் ராஜ்குமாா் தலைமையில் அதிவிரைவு வேட்டைப் பிரிவு காவலா்களுடன் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

அருகில் அடா்ந்த வனப் பகுதி உள்ளதால் அங்கிருந்து சிறுத்தை வந்திருக்கலாம் எனவும் சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com