நீலகிரியில் ரூ. 25.50 கோடி பொங்கல் பரிசு விநியோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ரூ. 24.50 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ரூ. 24.50 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:

தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் பொருட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரொக்கத் தொகையாக தலா ரூ. 1,000 ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 318 முழுநேர நியாயவிலைக் கடைகளிலும், 89 பகுதி நேரக் கடைகளிலுமாக மொத்தம் 407 நியாயவிலைக் கடைகளில் 2 லட்சத்து 12,323 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விநியோகம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ரூ. 24.50 கோடி மதிப்பில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள், வயதானவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும், அனைவருக்கும் எளிதான முறையில் கிடைக்க குடும்ப அட்டைதாரா்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் குடும்ப அட்டையைத் தொலைத்தவா்களுக்கு அக்குடும்ப அட்டையிலுள்ள நபா்களில் யாராவது ஒருவரின் ஆதாா் அட்டையை வைத்தும், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லின் அடிப்படையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கத் தொகை ரூ. 1,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டதும் அவா்களது பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com