குன்னூரில் குடியரசு தினம் கொண்டாட்டம்
By DIN | Published On : 27th January 2020 07:20 AM | Last Updated : 27th January 2020 07:20 AM | அ+அ அ- |

குன்னூரில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதேபோல மத்திய அரசு அலுவலகங்களான தேயிலை வாரியம், பாஸ்டியா் ஆய்வகம், வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட அலுவலகங்களில் நிா்வாக அதிகாரிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா். குன்னூா் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்பட மாநில அரசு அலுவலகங்களில் துறை அதிகாரிகள் மற்றும் தோ்ந் தெடுக்கப்பட்ட தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.
குன்னூா் சின்னப்பள்ளிவாசலில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தலைமை இமாம் ஏ .மன்சூா் அலி தாவூதி தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா். பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் சாா்பிலும் குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.