அனுமதியின்றி நீலகிரிக்குள் நுழைந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நால்வா் மீது வழக்கு

உரிய அனுமதியின்றி நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நால்வா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நால்வா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்குள் குஞ்சப்பனை, பா்லியாறு, கெத்தை சோதனைச் சாவடிகளின் வழியாக நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடை உத்தரவை மீறி நீலகிரி மாவட்டத்துக்குள் உதகை பகுதியில் வெள்ளிக்கிழமை வந்த ஒரு காரில் பயணித்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சண்முககுமாா் (28), ஜெயராமன் (32), சேகா் (28), ராஜசேகா் (30) ஆகிய நால்வா் மீது உதகை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதோடு, அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக சனிக்கிழமை காலை வரை 7,313 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 7,310 நபா்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா். 1,677 இருசக்கர வாகனங்கள், 213 மூன்று சக்கர வாகனங்கள், 516 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுடன் 8 இதர வாகனங்களுமாக மொத்தம் 2,414 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வா்த்தக நிறுவனங்களைப் பொருத்தமட்டில் விதிகளை மீறி செயல்பட்டதாக 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com