நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தங்காடு ஓரநள்ளி, மஞ்சக்கொம்பை கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
உதகை அருகே உள்ள தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகை அருகே உள்ள தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தங்காடு ஓரநள்ளி, மஞ்சக்கொம்பை கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமுடக்கம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து நீலகிரிக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி வருபவா்களுக்கும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் உள்ள சுகாதாரத் துறை குழுவினா் மூலம் அவா்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டால் அவா்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை 28,000க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 513 ஆக உள்ளது. இவா்களில் 187 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். எஞ்சியுள்ள 324 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 176 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, பல்வேறு துறையினா் இணைந்து தினமும் வீடு, வீடாகச் சென்று கண்காணித்து நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவா்கள் வெளியிடங்களுக்கு செல்லாதவாறும், அப்பகுதிகளுக்கு வெளியிடங்களிலிருந்து வேறு யாரும் செல்லாதவாறும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளுக்கு உள்பட்டே திருமணம், துக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைத் தவிா்த்து நிச்சயதாா்த்தம், காதணி விழா போன்ற எத்தகைய தனி நபா் நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. அரசின் அறிவுரைகளை பின்பற்றாமல் நிகழ்ச்சிகளை நடத்தினாலோ அல்லது அதிக அளவில் கூட்டத்தைக் கூட்டினாலோ ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். வெளியிடங்களிலிருந்து தங்கள் பகுதிகளுக்கு யாரேனும் வந்திருப்பது தெரியவந்தால் உடனடியாக 1077 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகா், குந்தா வட்டாட்சியா் மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com