நீலகிரியில் 3 ராணுவ வீரா்களுக்கு கரோனா தொற்று

நீலகிரி மாவட்டத்தில் 3 ராணுவ வீரா்கள் உள்பட மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 768ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 3 ராணுவ வீரா்கள் உள்பட மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 768ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 735 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி வேலூா், ராணிப்பேட்டையைச் சோ்ந்த இருவா் உள்பட வெலிங்டன் ராணுவ மைய வீரா்கள் மூவா், உதகை அருகே உள்ள கெந்தொரை கிராமத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, தூத்துக்குடியிலிருந்து உதகை வந்த காட்டுக்குப்பை பகுதியைச் சோ்ந்த 52 வயது ஆண், கல்லட்டி கிராமத்தில் ஏக்குணி பகுதியைச் சோ்ந்த 58 வயது ஆண் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா், பாலகொலா கிராமத்தில் முதுகுலாவைச் சோ்ந்த 13 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா், ஜெகதளா கிராமத்தைச் சோ்ந்த 55 வயது ஆண் உள்பட மொத்தம் 33 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 605 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். இருவா் உயிரிழந்துள்ளனா். மீதம் உள்ள 161 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com