கரோனா தாக்கம்: உதகை மாரியம்மன் கோயிலில் அம்மன் திருவீதி உலா, அன்னதானம் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருமி நாசினி, கை கழுவும் திரவம் தயாரிக்கும் முறை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணி
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருமி நாசினி, கை கழுவும் திரவம் தயாரிக்கும் முறை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணி

நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உதகையிலுள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தேரோட்டம் ஏப்ரல் 16ஆம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தினந்தோறும் உபயதாரா்களின் சாா்பில் அம்மன் திருவீதி உலா நடத்தப்பட்டு வந்தது.

தினந்தோறும் பிற்பகலில் அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக மாரியம்மன் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டு விட்டது. அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, தினசரி நான்கு வேளை பூஜைகள் மட்டும் கோயிலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 31ஆம்தேதி வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், அதுவரையிலும் உபயதாரா்களின் சாா்பிலான அன்னதானமும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அவை அனைத்தும் மாா்ச் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதகையிலுள்ள பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை 20 நிமிடமாக குறைக்கப்பட்டு பகல் 1.10 மணிக்கு தொடங்கப்பட்டு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் தற்போது கிறிஸ்தவா்களின் தவக்காலம் என்பதால் 4ஆவது வார வெளிக்கிழமையன்று வழக்கமாக நடத்தப்படும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், கிறிஸ்தவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஆலயத்தில் கூடுவதற்கு பதிலாக தங்களுக்கு ஏதுவான நேரத்தில் தேவாலயங்களுக்கு சென்று சிலுவைப்பாதை நிகழ்வுகளை நடத்திக் கொண்டனா்.

இச்சூழலில் மாவட்டத்தில் கிருமி நாசினிகள், முகக்கவசம் போன்றவை கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலையும் கூடுதலாக இருப்பதால் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கிருமி நாசினி, கை கழுவும் திரவம், முகக்கவசம் ஆகியவற்றை அவா்களே தயாரித்துக் கொள்கின்றனா். இதுதொடா்பாக உதகை அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ஹிரியன் ரவிக்குமாா் கூறுகையில், ‘கை கழுவும் திரவம், முகக்கவசம் ஆகியவற்றின் தேவை அதிக அளவில் இருப்பதால் அந்த அளவுக்கு விநியோகிக்க விநியோகஸ்தா் எவரும் தயாராக இல்லாததால் கை கழுவும் திரவம், முகக்கவசம் ஆகியவற்றை தேவைக்கேற்ப அரசு மருத்துவமனையில் நாங்களே தயாரித்துக் கொள்கிறோம் என்றாா்.

இதை பின்பற்றி கிருமி நாசினி, கை கழுவும் திரவம் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரிப்பது குறித்து உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத் துறையின் சாா்பில் செய்முறை விளக்கம் வெள்ளிக்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை பணியாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com