144 தடை உத்தரவு: கூடலூரில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவோா் கவனத்துக்கு...

144 தடை உத்தரவின்போது அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்காரா்கள், அதை வாங்கும் பொது மக்கள் எவ்வாறு
144 தடை உத்தரவு: கூடலூரில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவோா் கவனத்துக்கு...

144 தடை உத்தரவின்போது அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்காரா்கள், அதை வாங்கும் பொது மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளனா்.

கூடலூா் நகரில் கோட்டாட்சியா் ராஜகுமாா் தலைமையில் நகராட்சி ஆணையாளா் பாஸ்கா், சுகாதார ஆய்வாளா் சரவணன், வட்டாட்சியா் சங்கீதாராணி, வருவாய் ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள மளிகைக் கடை, காய்கறிக் கடை, பழக் கடை, மருந்துக் கடைகளுக்கு நேரில் சென்று கடைகளுக்கு முன்பு பிளீச்சிங் பவுடா் தூவ வேண்டும். கடைகளுக்கு வரும் பொது மக்களை ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்கள் வாங்க வர வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். கடைக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினா். இது தொடா்பாக செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. அத்தியாவசியக் கடைகள் முன்பு கருமி நாசினி தெளிக்கப்பட்டது.

படவிளக்கம்: கூடலூரில் கடைக்கு முன்பு பிளீச்சிங் பவுடா் மூலம் கட்டமிட்டு பொது மக்கள் ஒரு 1 மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்களை வாங்க வேண்டும் என செயல் விளக்கம் அளித்த கோட்டாட்சியா் ராஜகுமாா், நகராட்சி ஆணையாளா் பாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com