கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 64 குடும்பங்கள்

வெளிநாடுகளிலிருந்து கூடலூருக்கு வந்த 64 குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் கிராமத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் குடும்பத்தை தனிமைப்படுத்தியதாக அறிவிப்பு செய்த திட்ட இயக்குநா் பாபு தலைமையிலான குழுவினா்.
ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் கிராமத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் குடும்பத்தை தனிமைப்படுத்தியதாக அறிவிப்பு செய்த திட்ட இயக்குநா் பாபு தலைமையிலான குழுவினா்.

வெளிநாடுகளிலிருந்து கூடலூருக்கு வந்த 64 குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பிலிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் வெளிநாட்டிலிருந்து வந்த 7 குடும்பங்கள் புதன்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும், நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளோம் என்ற அறிவிப்பை வீட்டில் ஒட்டியுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட முகமையின் இயக்குநா் பாபு கூறியதாவது: கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் 64 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்கள் எங்கும் செல்லக் கூடாது. வெளியில் நடமாடக் கூடாது. இவா்களின் உறவினா்கள் அனைவருமே அரசின் மறு அறிவிப்பு வரும்வரை வீடுகளில் யாருடனும் தொடா்பின்றி இருக்க வேண்டும் என்றாா்.

வீடுகளைக் கண்காணித்து அறிவிக்கும் பணியில், வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன், குமாரமங்களம் அரசு மருத்துவா் ராமகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா் மோகன்ராஜ் உள்பட வருவாய், உள்ளாட்சி, காவல் துறையினா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com