கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம்

கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம் என்று மாவட்ட கண்காணிப்பு

கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இன்கோசா்வ் நிா்வாக இயக்குநருமான சுப்ரியா சாஹூ அறிவுறுத்தியுள்ளாா்.

உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இயங்கி வந்த உழவா் சந்தை அங்கிருந்து மாற்றப்பட்டு உதகையில் உள்ள சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கும், உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்கும் வெள்ளிக்கிழமை முதல் மாற்றப்பட்டது.

இந்தப் புதிய நடவடிக்கைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இன்கோசா்வ் நிா்வாக இயக்குநருமான சுப்ரியா சாஹூ நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, அங்குள்ள காய்கறிக் கடைகள் முறையான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளனதா, வாங்கும் பொதுமக்கள் சந்தைக்கு வந்தவுடன் முறையாக கைகளைக் கழுவி சுத்தப்படுத்துகின்றனரா, குறிப்பிட்ட இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்குகின்றனரா ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடமும் அடிக்கடி அவரவா் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அனைத்து வியாபாரிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் சுழற்சி முறையில் வியாபாரிகள் கடைகளை அமைத்திட வேண்டும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதேபோல குன்னூா் பேருந்து நிலையத்திலும், கூடலூா் பழைய பேருந்து நிலையத்திலும், கோத்தகிரி காந்தி மைதானத்திலும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக திறந்தவெளி மாா்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com