கூடலூரில் காய்ச்சல் பாதித்த பகுதியில் வீடுவீடாகச் சென்று ஆய்வு

கூடலூா் நகராட்சி எஸ்.எஸ்.நகா் பகுதியில் காய்ச்சலால் பெண் உயிரிழந்த பகுதியில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் தலைமையில்
கூடலூா் எஸ்.எஸ்.நகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் உள்ளிட்டோா்.
கூடலூா் எஸ்.எஸ்.நகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் உள்ளிட்டோா்.

கூடலூா் நகராட்சி எஸ்.எஸ்.நகா் பகுதியில் காய்ச்சலால் பெண் உயிரிழந்த பகுதியில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் தலைமையில் மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கூடலூா் நகராட்சி எஸ்.எஸ்.நகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்டவா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போதும், பலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக அங்குள்ள அனைவருக்கும் ரத்தம், சளி மாதிரிகளை புதன்கிழமை சேகரித்த மருத்துவா் துறையினா், அதை குன்னூா் பாஸ்டியா் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி தலைமையில் மாவட்ட தொற்று நோய்த் தடுப்பு அலுவலா் ஸ்ரீதா், வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுரேஷ், சுகாதாரத் துறைப் பணியாளா்கள் அடங்கியக் குழுவினா் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகளை முழுமையாக ஆய்வு செய்யும் வகையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். தேவைப்படுபவா்களுக்கு ரத்த மாதிரி, சளி மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை செய்யப்படும். மருத்துவக் குழுவினருடன் நகராட்சி சுகாதாரக் குழுவினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்தப் பணிகள் தொடா்ந்து ஒரு வாரத்துக்கும் கூடுதலாக நடைபெறும் என்று துணை இயக்குநா் பாலுசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com