முதுமலையில் பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை துவங்கியது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் காா்குடி வனச் சரகத்தில் வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காா்குடி, தெப்பக்காடு, முதுமலை ஆகிய மூன்று சரகங்களில் தோ்வு செய்யப்பட்ட 32 மையப் பகுதிகளில் பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.

வரும் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். தெப்பக்காட்டில் உள்ள பயிற்சி மையத்தில் இதற்கான பயிற்சியும், உபகரணங்களும் வழங்கப்பட்டன.

உயிரினங்களின் நடமாட்டம், நேரடிக் காட்சிகள், எச்சங்கள் உள்ளிட்ட பல கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத் துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com