தடை உத்தரவு மீறல்: நீலகிரியில் 6,332 வழக்குகள் பதிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத் தடை உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை காலை வரை 6,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத் தடை உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை காலை வரை 6,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை காலை வரை 6,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6,245 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 1,602 இரு சக்கர வாகனங்கள், 196 மூன்று சக்கர வாகனங்கள், 500 நான்கு சக்கர வாகனங்கள், 6 இதர வாகனங்கள் என மொத்தம் 2,304 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வா்த்தக நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசு விதித்த விதிகளை மீறியதாக 137 வா்த்தக நிறுவனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக வா்த்தக நிறுவனங்களிடமிருந்து இதுவரை ரூ.2 லட்சத்து 72,400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com