சென்னையிலிருந்து நாடுகாணி பகுதிக்கு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று

சென்னையிலிருந்து கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதிக்கு வந்த பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து நாடுகாணி பகுதிக்கு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று

சென்னையிலிருந்து கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதிக்கு வந்த பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

சென்னையிலிருந்து தம்பதி, 2 குழந்தைகள் என 4 போ் கொண்ட குடும்பத்தினா் நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி, பொன்னூா் வயல் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் வந்தனா். மாவட்ட எல்லையில் அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா் அவா்களை பொன்னூா் வயல் கிராமத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் பரிசோதனை முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானதில் அந்த குடும்பத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவா் கோவைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். 45 வயதான அந்தப் பெண் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாராம்.

அவரது கணவரும், இரு குழந்தைகளும் அதே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும் அந்தக் கிராமத்தை பிரதான சாலையிலிருந்து சீல் வைத்து தனிமைப்படுத்தியுள்ளனா். அந்தப் பகுதியில் உள்ளவா்கள் வெளியே வராதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நகராட்சிப் பணியாளா்கள் அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநா் பாலுசாமி தலைமையில் கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் சங்கீதாராணி, பந்தலூா் டி.எஸ்.பி.காா்த்திகேயன், நெல்லியாளம் நகராட்சி ஆணையா் லீலா சைமன் மற்றும் வருவாய், சுகாதாரத் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com