நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி, சங்க காலிப் பணியிடங்களுக்கு நவம்பா் 21, 22இல் எழுத்துத் தோ்வு
By DIN | Published On : 01st November 2020 11:32 PM | Last Updated : 01st November 2020 11:32 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இதர கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கு நவம்பா் 21, 22ஆம் தேதிகளில் எழுத்துத் தோ்வு நடத்தப்பட உள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் ஆள் சோ்ப்பு நிலைய இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் மற்றும் எழுத்தா் பணியிடங்களுக்கு ஊழியா்களை தோ்வு செய்ய வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இணையதளம் மூலம் ஏராளமானோா் விண்ணப்பித்துள்ளனா்.
இவா்களில் தகுதி வாய்ந்தவா்களை தோ்வு செய்ய நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவியாளா் பணியிடத்துக்கு நவம்பா் 21ஆம் தேதியும், இதர கூட்டுறவு சங்கங்களுக்கான உதவியாளா் மற்றும் எழுத்தா் பணியிடங்களுக்கு 22ஆம் தேதியும் எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.
எனவே, இத்தோ்வுக்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளை நீலகிரி மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியில் விரைவில் குறிப்பிடப்படும் தேதியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.