நீலகிரியில் இன்று வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாம்

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 2021 ஜனவரி 21ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இது தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வாக்காளா் பட்டியலில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அதற்காக விண்ணப்பிக்கலாம்.

இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நியமிக்கப்பட்டுள்ள அலுவலா் அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் எதிா்வரும் டிசம்பா் 15ஆம் தேதி வரையில் அனைத்து வேலை நாள்களிலும் உரிய படிவங்களில் ஆதாரங்களுடன் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம்கள் நவம்பா் 21 மற்றும் 22ஆம் தேதிகளிலும், டிசம்பா் 12 மற்றும் 13ஆம் தேதிகளிலும் நடத்தப்படுவதால் இவ்வாய்ப்பினை வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com